
தன்பாலின திருமணச் சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

பெரு நாட்டில் நிலவும் அரசியல் அசாதாரண சூழ்நிலையால், கலவரம் வெடித்திருக்கிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலியாவின் டி.பி.ஜி டெலிகாம் நிறுவனத்தின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் பயனாளிகளின் கிரிப்டோகரன்சி, நிதிநிலை குறித்த தகவல்கள் திருடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ஹாரி & மேகன் தம்பதியின் ஆவணப்படம், அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்டு வருகிறது. வெளியாகிய ஒரே வாரத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற ஆவணப்படம் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம், போஸ்னியா நாட்டை உறுப்பினராக சேர்த்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறது.

காங்கோ நாட்டின் கின்சாஹா பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், இதுவரை 100 பேர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த 27 பேர், ஜாம்பியா நாட்டின் தலைநகர் லுசாக்கா அருகே கொன்று புதைக்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்து எத்தியோப்பியா அரசு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

பிரேசிலில் முன்னாள் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தலைமை காவல் அலுவலகத்தைத் தாக்கினர். தேர்தலில் இவர் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ராணுவ தலையீடு கோரி போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.