வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இலங்கை சென்றுள்ள நம் கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரிகுமார், அந்நாட்டு துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தப்பட்டதற்கு, கடும் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பிச் செல்ல, இலங்கை அரசு கடந்த ஆகஸ்டில் அனுமதி அளித்தது. இந்த உளவு கப்பலை, இலங்கையில் சீனா நிறுத்தினால், இந்திய ராணுவம் மற்றும் கடற்படை தளங்களை எளிதில் உளவு பார்க்க வாய்ப்புள்ளதாக இந்தியா கருதியது.
![]() |
எனவே, கப்பலை இலங்கையில் நிறுத்தஅனுமதி அளித்ததற்கு கண்டனம் தெரிவித்தது. இந்திய அரசின் எதிர்ப்பை தொடர்ந்து, உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுத்தது.
ஆனால் திடீரென தங்கள் முடிவை மாற்றிய இலங்கை அரசு, கடந்த ஆக., 16 – 22 வரையில், ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன உளவு கப்பலை நிறுத்திக் கொள்ள அனுமதி அளித்தது.
இந்நிலையில், நம் கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரிகுமார், நான்கு நாள் பயணமாக நேற்று முன்தினம் இலங்கை சென்றுள்ளார். அந்நாட்டு கடற்படை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
இலங்கை ராணுவத்தின் இதர படைப் பிரிவுகளுக்கும் சென்று, இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றங்களை ஆய்வு செய்ய உள்ளார். அப்போது, ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன உளவு கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்ததற்கு, நம் தரப்பு எதிர்ப்பை அவர் நேரில் பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
– புதுடில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement