நெருக்கடியில் பாகிஸ்தான்… அமெரிக்காவில் உள்ள தூதரக கட்டிடத்தை விற்க முயற்சி!

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள தனது தூதரக சொத்து ஒன்றை விற்க பாகிஸ்தான் விரும்புகிறது. இந்த கட்டிடம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. 1950 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவை இந்த பழைய கட்டிடத்தில்  இயங்கி வந்ததாகவும், இந்த கட்டிடம் சந்தை பகுதியில் இருப்பதாகவும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் தி டானிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அதிகாரி கூறுகையில், ‘விற்பனைக்கு முறையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். தூதரகம் முன்மொழியப்பட்ட விற்பனையை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து பல ஏலங்களைப் பெற்றுள்ளது. அவர்களுக்கு எது சிறந்தது என்பதை மதிப்பிடுவதற்கு மதிப்பீட்டாளரையும் கலந்தாலோசித்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது என கூறினார்.  பாகிஸ்தான் தூதரக அதிகாரி, ‘நாங்கள் அவசரப்படவில்லை, பாகிஸ்தான் பாதிக்கப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் நாங்கள் செய்ய மாட்டோம்’ என்றார்.

தற்போதைய மற்றும் பழைய தூதரகத்திற்கு சொந்தமான இரண்டு கட்டிடங்கள் சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ளது. ஆனால் இந்த கட்டிடங்கள் எதுவும் விற்பனைக்கு இல்லை என்று தூதரகம் கூறுகிறது. தற்போதைய தூதரகம் புதிய கட்டிடத்தில் உள்ளது. இது 2000 களின் முற்பகுதியில் கட்டப்பட்டது. அதே நேரத்தில் பழைய தூதரக கட்டிடம் மாசசூசெட்ஸ் அவென்யூவில் நகரின் மையத்தில், இந்திய தூதரகத்திற்கு அருகில் உள்ளது.

புதிய தூதரகத்தை விற்க யாரும் முன்வரவில்லை என்றாலும், பழைய தூதரகம் மற்றும் தூதரகத்தின் ஆர் ஸ்ட்ரீட் கட்டிடம் சில காலமாக விற்பனை செய்யப்படலாம் என்று தகவல்கள் அவ்வப்போது வெளி வருகின்றன. எனினும் புதிய தூதரகமோ அல்லது பழைய தூதரகமோ விற்பனைக்கு இல்லை என தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் தூதரகம் பழைய கட்டிடம் மற்றும் அருகிலுள்ள தூதுவரின் அதிகாரபூர்வ இல்லத்தை புதுப்பிக்க சுமார் ஏழு மில்லியன் டாலர்களை செலவிட்டது.

கட்டிட சீரமைப்புக்கு செலவிடப்பட்ட தொகை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எதற்காக இவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பழைய கட்டிடம் புதுப்பிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், கட்டடத்தின் நிலை குறித்து, உள்ளாட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்தனர் எனவும், அதனால் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பலர் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.