மும்பை :முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பீஹார் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்., தலைவருமான சரத் பவார், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர், மும்பையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் இவரது வீட்டுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், சரத் பவாரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
விசாரணை நடத்திய போலீசார், பீஹார் மாநிலத்தில் இருந்து சோனி என்ற இளைஞர் இந்த மிரட்டலை விடுத்ததை கண்டுபிடித்தனர். தெரியாமல் செய்து விட்டதாகவும், இனி அதுபோல் தவறு செய்ய மாட்டேன் என்றும் மன்னிப்பு கேட்டதால், போலீசார் அவரை விடுவித்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் சரத் பவார் வீட்டுக்கு போனில் பேசிய அந்த இளைஞர், ‘விரைவில் மும்பைக்கு வந்து சரத் பவாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப் போகிறேன்’ என்றார்.
இதையடுத்து பீஹாருக்கு சென்ற மும்பை போலீசார், மிரட்டல் விடுத்த சோனியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement