குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற, பிரமுக் சுவாமி மகராஜின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கண்கவர் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.
விழாவில் பேசிய பிரதமர், நாட்டின் துடிப்பையும், பன்முகத்தன்மையின் ஒவ்வொரு அங்கத்தையும் இந்நிகழ்ச்சியில் காண முடிவதாக தெரிவித்தார். பிரமுக் சுவாமி மகராஜ் ஒரு சீர்திருத்தவாதி எனவும், அவரது இலட்சியங்களால் தான் ஈர்க்கப்பட்டதாகவும் மோடி குறிப்பிட்டார்.