தென்காசி: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிப்பு காரணமாக குற்றால அருவியை நோக்கி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை லேசான சாரல் மழை பெய்தது.
இந்நிலையில் மாலை 5 மணிக்கு மேல் சுமார் 20 நிமிடம் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.