வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு

சட்டோகிராம்,

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

வீரர்கள் விவரம்:-

இந்தியா: கேஎல் ராகுல் (கேப்டன்), சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

வங்காளதேசம்: ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, லிண்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), யாசிர் அலி, நுருல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலித் அகமது, எபாதத் ஹூசைன்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.