வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்ப்பு

டாக்கா,

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 278- ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக புஜரா 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் உள்ளார். பந்து வீச்சை பொறுத்தவரை அதிகபட்சமாக வங்காளதேச வீரர் தஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.