போலி தராசுகளை பயன்படுத்தி விவசாயிகள் சுரண்டப்படுவதை தடுக்க அளவீட்டு அலகுகள் மற்றும் தரநிலை சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து கூட்டு வேலைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையில் எடை மற்றும் அளவீடுகளுக்கு பயன்படுத்தப்படும் பெரும்பாலான தராசுகள் நடைமுறைக்கு உட்பட்டதா இல்லை. இதனால், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை கொள்வனவுசெய்வோர் அவர்களை சுரண்டும் முறை நாடுபூராகவும் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புளத்சிங்கல பிரதேசத்தில் விவசாய சேவை நிலையம் ஒன்றினால் வழங்கப்பட்ட யூரியா உர மூட்டை ஒன்றில் சரியான எடை காணப்படவில்லை என்று விவசாயிகள் முறையிட்டதனால், அங்கு பொலிசார் தலையிட்டு மின்சாரத் தராசில் நிறையை அளவிட்டுள்ளனர். ஆனால், அங்கு உரம் சரியான எடையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்