ஸ்தம்பிக்கும் மருத்துவமனைகள்… மருந்துகள் பற்றாக்குறை: அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கையால் திணறும் நாடு


சீனாவில் சுகாதார மையங்களில் கொரோனா நோய் அறிகுறிகளுடன் மக்கள் கூட்டம் சிகிச்சைக்காக காத்திருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

மட்டுமின்றி, மக்கள் போராட்டத்தை தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையிலேயே தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்தம்பிக்கும் மருத்துவமனைகள்... மருந்துகள் பற்றாக்குறை: அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கையால் திணறும் நாடு | Hospitals Swamped Patients Doctors Catching Virus

@reuters

மேலும், பல மருத்துவமனைகளில் நர்ஸ் மற்றும் மருத்துவர்களும் பாதிப்புக்கு இலக்காகியுள்ளதால், மக்கள் கடும் அவதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அறிகுறிகள் அற்ற நோயாளிகள், பாதிப்பு குறைவானவர் ஆகியோர்கள் எண்ணிக்கையை சீன சுகாதாரத்துறை உட்படுத்தாததை தொடர்ந்து, பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை சரிவடைந்து காணப்பட்டது.

கட்டுப்பாடுகளை தளர்த்துவதால், தொற்றுநோய் பரவல் தீவிரமடைந்து சீனா பரிதாப நிலைக்கு தள்ளப்படும் என்று நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
மேலும், மேற்கத்திய நாடுகளின் தடுப்பூசியை ஒப்பிடுகையில் சீனாவின் தடுப்பூசியானது குறைவான செயல்திறன் கொண்டது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்தம்பிக்கும் மருத்துவமனைகள்... மருந்துகள் பற்றாக்குறை: அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கையால் திணறும் நாடு | Hospitals Swamped Patients Doctors Catching Virus

@AP

கட்டுப்படுத்த முடியாமல் போகும்

இதனிடையே, மருந்து பற்றாக்குறை, மருத்துவர்களும் நோய்வாய்ப்பட்டு வரும் நிலை, இதனால் உரிய சிகிச்சை பெற முடியாமல் மக்கள் கைவிடப்படும் போது, மரண எண்ணிக்கை அதிகரிக்க துவங்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால், கட்டுப்பாடுகளை மீண்டும் அமுலுக்கு கொண்டுவந்தால், மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும் அபாயம் இருப்பதாக ஆளும் அரசு அச்சம் தெரிவித்துள்ளது.
சிச்சுவான் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், நாளுக்கு 700 முதல் 800 நோயாளிகள் சிகிச்சை தேடி வருவதாக கூறும் மருத்துவர் ஒருவர், நாடி வரும் மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்தம்பிக்கும் மருத்துவமனைகள்... மருந்துகள் பற்றாக்குறை: அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கையால் திணறும் நாடு | Hospitals Swamped Patients Doctors Catching Virus

@reuters

மருந்துகளின் கையிருப்பு கரைந்து வருவதாக கூறும் அவர், இனி புதிதாக மருந்து வந்து சேரும் வரையில் சிகிச்சை அளிப்பதும் கடினம் என்றார்.
தலைநகர் பெய்ஜிங்கில் மருத்துவமனை ஒன்றில் 50 கொரோனா நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சையில் இருப்பதாக பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், தலைநகரில் உள்ள சில மருத்துவமனைகளில் 80% ஊழியர்கள் நோய் பாதிப்புடன் பணியிலும் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.