புதுடெல்லி: நம் நாட்டில் செயல்படும் தன்னார்வ அமைப்புகள் (என்ஜிஓ) வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கு, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்ஆர்சிஏ) கீழ் உரிமம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் எப்ஆர்சிஏ சட்ட விதிகளை மீறியதற்காக கடந்த 2019 முதல் 2021 வரையிலான 3 ஆண்டுகளில் 1,811 தன்னார்வ அமைப்புகளின் எப்ஆர்சிஏ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சர் நித்யானந்த ராய் மக்களவையில் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.
“நம் நாட்டில் தீவிரவாத செயல்பாடுகளை பரப்புவதற்கு, வெளிநாட்டு நிதியை பயன்படுத்துவது தொடர்பான ஏதேனும் ஆதாரங்கள் பெறப்பட்டால், எப்ஆர்சிஏ மற்றும் தற்போதையபிற சட்டங்கள் மற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.