கணித்தது பலித்தது… உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதவிருக்கும் பிரான்ஸ்


வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பிரேசில் நாட்டவரான அதோஸ் சலோமி கத்தார் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்பில் கணித்தது தற்போது பலித்துள்ளது.

அதோஸ் சலோமி ஆருடம்

கத்தார் உலகக் கோப்பை தொடர் தொடங்கும் முன்னர், இந்தமுறை இறுதிப் போட்டியில் மோதும் இரண்டு அணி தொடர்பில் பிரேசில் நாட்டவரான அதோஸ் சலோமி தமது ஆருடத்தை பதிவு செய்திருந்தார்.

கணித்தது பலித்தது... உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதவிருக்கும் பிரான்ஸ் | Correctly Predicts France Argentina Reach Final

@getty

அதில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் பிரான்ஸை எதிர்கொள்ளும் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஐந்து அணிகளுக்கு மட்டுமே இந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் தகுதி இருக்கிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா பரவல், ராணியாரின் மறைவு, உணவு பற்றாக்குறை உட்பட பல முக்கிய நிகழ்வுகளை அதோஸ் முன்னரே கணித்துள்ளார்.
2022 கத்தார் உலகக் கோப்பை தொடர்பில் குறிப்பிட்ட அவர், போட்டி துவங்கிய திகதி, பங்கேற்கும் நாடுகளின் முதல் எழுத்து ஆகியவை ஆராய்ந்தால் அர்ஜென்டினா, பிரேசில், பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இறுதிப்போட்டியில் முன்னேறும் தகுதி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

கணித்தது பலித்தது... உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதவிருக்கும் பிரான்ஸ் | Correctly Predicts France Argentina Reach Final

@getty

பிரான்ஸ் vs அர்ஜென்டினா

அத்துடன், இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதும் எனவும் கணித்திருந்தார்.
இதனையடுத்து, PSG அணிக்காக விளையாடும் Mbappe மற்றும் மெஸ்ஸி ஆகிய நட்சத்திரங்கள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர் என்பது இரண்டாவது அரையிறுதியில் மொராக்கோ அணியின் தோல்வி உறுதி செய்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.