கண் முன்னே தலை இல்லாமல் கிடந்த மகள்… கோரமாக கொல்லப்பட்ட கணவன்: உக்ரைன் பெண் ஒருவரின் பயங்கர அனுபவம்


உக்ரைன் போர் இன்னமும் தொடர்ந்தவண்ணம்தான் உள்ளது. ஒருபக்கம் நாடுகளின் தலைவர்கள் போரை நிறுத்துவது குறித்து பேசிக்கொண்டேஇருக்கிறார்கள், ஆனால், உருப்படியாக எதுவும் நடந்ததுபோல் இல்லை.

அதே நேரத்தில் இன்னொருபக்கம், சக மனிதர்கள் கொல்லப்படுவதையும், குடும்ப உறுப்பினர்களை இழந்து அவர்கள் தவிப்பதையும் பார்க்க சகிக்காமல், எதையாவது செய்யவேண்டும் என துடிக்கும் சில நல்ல மனிதர்கள், சாதாரண மக்கள், நடைமுறையில் களத்தில் இறங்கி மக்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

கண் முன்னே தலை இல்லாமல் கிடந்த மகளும் கோரமாக கொல்லப்பட்ட கணவனும்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, உக்ரைனிலுள்ள Yahidne என்ற கிராமத்தில் வாழ்ந்துவந்த விக்டோரியா (Viktoriia Kovalenko), அவரது கணவர் பீற்றர், மகள்கள் வெரோனிகா (Veronika, 12) மற்றும் Varvara (1.10 மாதங்கள்) ஆகியோருடன், தப்பியோடமுயன்றிருக்கிறார்கள்.

கண் முன்னே தலை இல்லாமல் கிடந்த மகள்... கோரமாக கொல்லப்பட்ட கணவன்: உக்ரைன் பெண் ஒருவரின் பயங்கர அனுபவம் | Watched Russians Kill Husband Daughter Escape

Credit: Supplied

ஆனால், வழியில் அவர்களுடைய கார் ரஷ்யப் படையினரிடம் சிக்கிக்கொள்ள, சரமாரியாக கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலையில் இரத்தம் வடிய குழந்தையைக் கட்டியணைத்துக்கோண்டிருந்த விக்டோரியா, அவரது மூத்த மகள் வெரோனிகா காரிலிருந்து இறங்கி ஓடவே, அவளுக்குப் பின்னாலேயே ஓடியிருக்கிறார்.

அப்போது அவர்கள் பயணித்த கார் தீப்பற்ற, காருக்குள் இருந்த தன் கணவர் இறந்துவிட்டதை அறிந்துகொண்ட விக்டோரியா, தன் கண்முன் தன் கணவர் எரிந்து சாம்பலாவதைக் கண்டு அதிர்ந்துபோய் நிற்க, மறுபக்கம் திரும்பிப் பார்த்தால் அங்கே மற்றொரு பயங்கர காட்சி கண்ணில் பட்டிருக்கிறது.

தாக்கப்பட்ட வெரோனிகா தரையில் இறந்துகிடந்திருக்கிறாள். அவளது தலையைக் காணவில்லை.

கண் முன்னே தலை இல்லாமல் கிடந்த மகள்... கோரமாக கொல்லப்பட்ட கணவன்: உக்ரைன் பெண் ஒருவரின் பயங்கர அனுபவம் | Watched Russians Kill Husband Daughter Escape

Credit: Supplied

கையில் சின்னக் குழந்தை Varvaraவைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த பழைய கட்டிடம் ஒன்றிற்குள் ஓடிய விக்டோரியாவை, பின்னர் ரஷ்யப் படைகள் பிடித்து ஒரு இருட்டறைக்குள் அடைத்திருக்கிறார்கள்.

அங்கே சுமார் 300 பேர், உக்ரைன் நாட்டவர்களான வயதான பெண்களும் சிறுபிள்ளைகளும் இருந்திருக்கிறார்கள். உணவு இல்லாமல், நின்றபடியே தூங்கி, குழந்தையை வைத்துக்கொண்டு, வெளிச்சமோ காற்றோ இல்லாமல் 25 நாட்கள் நரக வேதனை அனுபவித்துக்கொகொண்டிருந்தபோதுதான் ரஷ்யப் படைகள் அங்கிருந்து வெளியேற, விக்டோரியாவின் கணவருடைய பெற்றோர் அவரைத் தேடிவந்திருக்கிறார்கள்.

ஹீரோவாக செயல்படும் சாதாரண மனிதர்கள்

ஒருபக்கம் போரை எப்படி நிறுத்துவது என தலைவர்களும் அரசியல்வாதிகளும் தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கும் நிலையில், தொண்டு நிறுவனங்கள் வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல், களத்தில் இறங்கி தங்களால் ஆன உதவியை செய்துகொண்டிருக்கின்றன.

அவ்வகையில், விக்டோரியாவைக் குறித்துக் கேள்விப்பட்ட Nadiya என்னும் தொண்டு நிறுவன இணை நிறுவனரான Derek Edwards என்னும் பிரித்தானிய தொழிலதிபர், விக்டோரியாவையும் அவரது மகளையும் பிரித்தானியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

கண் முன்னே தலை இல்லாமல் கிடந்த மகள்... கோரமாக கொல்லப்பட்ட கணவன்: உக்ரைன் பெண் ஒருவரின் பயங்கர அனுபவம் | Watched Russians Kill Husband Daughter Escape

Credit: Supplied

அவரது தொண்டுநிறுவனம், இதுவரை சுமார் 200 அகதிகளுக்கு முறைப்படி விசா பெற்றுத்தந்து, அவர்களை பிரித்தானியாவுக்குக் கொண்டுவந்துள்ளது.

அதேபோல, தீவிரமுயற்சிக்குப் பின், விக்டோரியாவும் அவரது குழந்தையும் பல கஷ்டங்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை பிரித்தானியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள். கென்டில் திருச்சபை ஒன்று அளித்துள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவருகிறார்கள் அவர்கள்.

Derekஇன் பணி தொடர்கிறது.
 

கண் முன்னே தலை இல்லாமல் கிடந்த மகள்... கோரமாக கொல்லப்பட்ட கணவன்: உக்ரைன் பெண் ஒருவரின் பயங்கர அனுபவம் | Watched Russians Kill Husband Daughter Escape

Credit: Supplied



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.