தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். பல மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் ஆண்ட்ரே கோஷீவ் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார், சமீபத்தில் தனது பெண் குழந்தை பற்றி இவர் வெளியிட்டுள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது ஒவ்வொரு நடிகைகளும் தனது கர்ப்பத்தை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்து வரும் நிலையில் ஸ்ரேயா அப்படி எந்த செய்தியையும் வெளியிடவில்லை, தற்போது குழந்தை பிறந்த செய்தியை மட்டும் அறிவித்து இருந்ததால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
இந்நிலையில் நடிகை ஸ்ரேயா தான் எதனால் கருவுற்று இருந்த செய்தியினை அறிவிக்கவில்லை என்பதை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறுகையில், நான் அந்த சமயம் மிகவும் பயத்தில் இருந்தேன், ஏனென்றால் எனக்காகவும் என் குழந்தைக்காகவும் நேரத்தை செலவிட நான் நினைத்தேன். என் மகள் ராதா வயிற்றில் இருக்கும்போது நான் குண்டாக இருந்தேன், என்னை பற்றி யார் என்ன எழுதினாலும் எனக்கு கவலையில்லை. நான் என் குழந்தையின் மீது அக்கறை செலுத்த விரும்பினேன். இதுதான் நான் கருவுற்ற செய்தியை அறிவிக்காததற்கு அழுத்தமான காரணம் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசியவர், நான் கருவுற்றதை வெளியில் சொல்லாமல் இருந்ததற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது, நான் கர்ப்பமாக இருப்பதை வெளியில் சொன்னால் எனக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர வெகு நாட்கள் எடுக்கும். இது ஒரு ஊடகம் என்பதால் இதில் நடிப்பவர்கள் இப்படிப்பட்ட உடலமைப்பில் தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள். அந்த சமயத்தில் நான் மூன்று படங்களில் ஒப்பந்தமாகி இருந்தேன். ராதா ஒன்பது மாத குழந்தையாக இருக்கும்போது நான் கடுமையாக பயிற்சி செய்து என் உடல் எடையை குறைத்தேன். ஆண் நடிகர்களிடம் யாரும் குழந்தை இருப்பதால் நீங்கள் நடிக்கமுடியுமா என்று கேட்பதில்லை, பெண் நடிகைகளிடம் மட்டும் இதுபோன்று கேட்கிறார்கள். இவையெல்லாம் தான் நான் பொதுவெளியில் என் கர்ப்பத்தை பற்றி கூறாததற்கான காரணமாகும்.