பள்ளிகளில் ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் சிசிடிவி 636 காமிராக்கள்! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் 636 சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சென்னைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, மாநகராட்சி பள்ளிகளில் புதிய கட்டடங்கள், வள வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், நவீன மேசைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களுக்கு வண்ண சீருடைகள், மாநகராட்சி பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை போன்ற பல்வேறு விதமான நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படியும், மேயர் பிரியாவின் ஆலோசனையின் படியும், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, கண்காணிப்பு காமிராக்கள்  அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்சமயம், நிர்பயா நிதியின் கீழ், மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாநகராட்சியின் 29 மேல்நிலைப்பள்ளிகள், 37 உயர்நிலைப்பள்ளிகள், 90 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 3 தொடக்கப் பள்ளிகள் என 159 பள்ளி வளாகங்களில் ரூ.4,64,61,705/- மதிப்பில் 636 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.