புதுடெல்லி: சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ இணைய தளத்தை போன்று ஒரு இணையதளத்தை மோசடி கும்பல் உருவாக்கி உள்ளது கவனத்திற்கு வந்துள்ளது. இதில் தேர்வு எழுதுவதற்கு அனுமதி அட்டை பெற வங்கியில் கட்டணம் செலுத்துமாறு மாணவர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். இதுபோன்ற போலி இணையதளங்களை நம்பி மாணவர்கள், பெற்றோர்கள் ஏமாற வேண்டாம். தேர்வுக்கான அனுமதி அட்டைக்கு சிபிஎஸ்இ பணம் வசூலிப்பது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
