சென்னை தலைமைச் செயலகத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 2 கோடியே 66 லட்சம் மின் இணைப்பு தரார்கள் இருப்பதாகவும் இன்று காலை 11:00 மணி நிலவரப்படி ஒரு கோடியே 3 லட்சம் பேர் தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதில் 51 லட்சம் பேர் ஆன்லைன் மூலமாகவும் 52 லட்சம் பேர் மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் மின் இணைப்பு என்னுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த மாதம் 31ம் தேதி வரை மின் இணைப்புதரர்கள் தங்களது என்னுடன் ஆதார் எண்ணை சிறப்பு முகாம்களிலோ அல்லது அந்தந்த மின் கோட்டை வாரிய அலுவலகங்களிலோ தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் எனவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
25 ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய அந்த பணியானது நடைபெறாது என கூறிய அமைச்சர், சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் பொதுமக்கள் பயன் அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மின் வாரிய ஊழியர்களுடன் மின்வாரிய நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், ஊழியர்களின் எண்ணப்படி மின் வாரியத்தை செயல்படுத்த முடியாது என தெரிவித்தார். மேலும் அவர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த முன் வாரிய நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
மின்வாரிய வருவாயை கடந்த ஆட்சியை விட தற்போது கூடுதல் வருவாய் வரக்கூடிய துறையாக மாற்றி உள்ளதாகவும், 13 கோடியே 71 லட்ச ரூபாயாக வருவாய் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தார். மின்வாரியம் வங்கிகளில் பெறப்பட்டுள்ள கடன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை தற்போது வட்டியை விகிதத்தை குறைத்துள்ளதால் 84 கோடி ரூபாய் செலவு மிச்சமாகி, மின்சார துறையை சீரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும், 7 டிவிஷனில் புதைவட கம்பிகள் பதிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்ற வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.