ஹன்சிகா குடும்பத்தில் அதிர்ச்சி… திருமணம் முடிந்த கையோடு விவாகரத்து!

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானிக்கும், அவரது நீண்ட நாள் நண்பர் சோஹைல் கத்தூரியாவை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். ஜெய்ப்பூரில் உள்ள கோட்டையில், அவரது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெங்கிய நண்பர்கள், உறவினர்கள், திரை பிரபலங்கள் சிலர் கலந்துகொண்டனர். 

அவரது திருமண புகைப்படங்கள் வெளியான போது, பலரும் அதில் காணப்பட்ட நிலையில், ஹன்சிகாவின் உடன்பிறந்த அண்ணன் பிரசாந்த் மோத்வானியும், அவரது மனைவி முஸ்கான் நான்சியும் எந்த புகைப்படங்களிலும் தென்படவில்லை என தகவல்கள் கூறப்பட்டன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

தற்போது, ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாள்களே ஆன நிலையில், அவரது அண்ணன் பிரசாந்த் விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தம்பதிகள் நீண்ட நாள்களாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து பெற உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. 

ஹன்சிகாவின் திருமணத்தில் தென்படாத பிரசாந்தின் மனைவி முஸ்கான், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனது திருமண புகைப்படங்களையும் நீக்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

கடந்தாண்டு, மார்ச் 21ஆம் தேதி பிரசாந்த் மோத்வானி – முஸ்கான் நான்ஸி இணையரு்கு திருமணம் நடந்தது. அந்த  திருமணத்திற்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். தற்போது, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவர்களின் திருமண வாழ்வு முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

சமீபத்தில், பிரசாந்தின் மனைவி முஸ்கானின் சமூக வலைதள பதிவு ஒன்றுதான், இந்த விவாகரத்து வதந்திகளை கிளப்பியுள்ளது. அந்த பதிவில்,”பெல்ஸ் பால்ஸி (முகத்தில் பக்கவாதம்) எனும் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். இது மன அழுத்தம், கவலை, அதிர்ச்சி, வைரஸ் தொற்று போன்றவற்றால் ஏற்படும். இந்த நோய், உங்களின் முகத்தை பாதிக்கும்.

நான் 70 சதவீதம் குணமான பின்னரும், தற்போது அது மீண்டும் என்னை பாதித்துள்ளது. கடந்த சில மாதங்கள், எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் மிகவும் கடினமாகவே இருந்து வந்தன. ஒரு கலைஞராக, வீங்கிய முகத்துடன், தாங்கமுடியாத வலியுடன் தினமும் காலையில் எழுந்திருப்பது என்பது மிகவும் கொடுமையானது” என பதிவிட்டிருந்தார். முஸ்கான் நான்ஸி, பல்வேறு ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

கடந்த நவம்பர் 2ஆம் தேதி, இந்த நோய்க்கு அவர் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு துணையாக அவரது தாய் தந்தையர் இருந்ததாக கூறும் முஸ்கான், எந்த இடத்திலும் அவரின் கணவர் பெயரை குறிப்பிடவில்லை. மேலும், சமூக வலைதளங்களில் முஸ்கான், அவரது கணவர் பிரசாந்த் மற்றும் ஹன்சிகா ஆகியோரை அன்ஃபாலோ செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட மனைவியுடன் வாழ முடியாது என பிரசாந்த் கூறியதால்தான், அவர்களுக்கு பிரச்னை ஆரம்பித்தது என நெட்டிசன்கள் தற்போது வதந்திகளை பரப்பத்தொடங்கியுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.