ஆதார் எண் இணைக்காதோர் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படுமா?| Dinamalar

புதுடில்லி,:“வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது,” என, மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நேற்று, கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:

நாடு முழுதும், தன்னார்வ அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை ஆக., 1 முதல் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

ஆனால், இது கட்டாயம் அல்ல. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காத வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப் படாது.

அதே நேரத்தில், நாடு முழுதும் உள்ள 95 கோடி வாக்காளர்களில் 54 கோடி பேர் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர். என்றாலும், இது கட்டாயம் ஆக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துக் கணிப்புக்கு தடையா?

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின், ஓட்டுப்பதிவு முடியும் வரை கருத்துக் கணிப்பு வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஓட்டுப்பதிவு முடிந்த பின்னும் கருத்துக் கணிப்பு வெளியிட தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என, லோக்சபாவில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. ஓட்டுப்பதிவு முடிந்த அடுத்த அரை மணி நேரத்தில் கருத்துக் கணிப்பு வெளியிடுவது தொடரும்’ எனக் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.