கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜி20 அமைப்பின் கட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றப்பிறகு, முதல் முறையாக இக்கூட்டம் நடைபெறுகிறது.
தேவனஹள்ளியில் இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், ஜி20 அமைப்பை சேர்ந்த பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.