ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக கூறி மரணதண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் தமது கடைசி ஆசையாக தமது கல்லறையில் குர்ஆன் ஓதுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் முன்னிலையில்
ஈரானின் மஷாத் நகரில் திங்கட்கிழமை பொதுமக்கள் முன்னிலையில் குறித்த இளைஞர் தூக்கிலிடப்பட்டார்.
நான்கு நாட்களுக்கு முன்னர் மொஹ்சென் சேகாரி என்ற 23 வயது இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் திங்களன்று மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சர்வதேச எதிர்ப்பையும் மீறி ஒரு ஆர்ப்பாட்டக்காரர் மீது மரண தண்டனை விதிக்கப்படுவது முதல் முறை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இளைஞர் Majidreza Rahnavard-ன் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.
கண்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்படும் அந்த இளைஞர் தெரிவிக்கையில், எவரும் எனக்காக எனது கல்லறையில் துக்கமனுசரிக்க வேண்டாம்.
எவரும் எனக்காக குர்ஆன் ஓதவோ பிரார்த்தனை செய்யவோ வேண்டாம், மாறாக கொண்டாடுங்கள், குதூகலமான இசையுடன் கொண்டாடுங்கள் என தெரிவித்துள்ளார்.
Just before he’s hanged on Dec.12 by Iran’s regime,they interrogate #MajidrezaRahnavard
His last words:I don’t want Quran to be read or prayed on my grave,just celebrate
Sharia law is the reason he’s gone
His verdict:War with AllahOnly because he demonstrated for his rights pic.twitter.com/1uQpYhpGIq
— Darya Safai MP (@SafaiDarya) December 15, 2022
இசையுடன் கொண்டாடுங்கள்
குறித்த காணொளியை பெல்ஜியம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த இரு வீரர்களை கத்தியால் தாக்கி கொன்றதாக கூறி Rahnavard மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

உண்மையில், ஒப்புதல் வாக்குமூலம் எனப்படுவது, கண்டிப்பாக கட்டாயத்தின் பேரில் தான் என குறிப்பிட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்கள், விசாரணை கூட வெறும் நாடகம் தான் என தெரிவித்துள்ளனர்.
கைதான சில நாட்களில் விசாரணை முடித்து மரண தண்டனையும் நிறைவேற்றுவது என்பது, ஈரானிய தலைவர்கள் முன்னெடுக்கும் இன்னொரு குற்றச்செயல் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.