செங்கலடி, ஏறாவூர் பிரதேசங்களில் உணவகங்கள் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுகளில் உணவகங்கள்  பொதுச் சுகாதார அதிகாரிகலால்  சுற்றிவளைக்கப்பட்டன.  

இதன்போது இப்பிரதேசத்திலுள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள், பழக்கடைகள், சிற்றுண்டிச் சாலைகள், உணவு ப் பொருள் கடைகள் என 112 இடங்களை அதிகாரிகள் நேற்று (15) திடீர் பரிசோதனை செய்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் 5 மருத்துவ சுகாதார அதிகாரிகள் பணிமனை ஆகியவற்றின்  60 அதிகாரிகள் இப்பரிசீலனையில் ஈடுபட்டனர்.

பொது மக்களின் உணவு நஞ்சாகுவது பாதுகாப்புக் கருதி 20 இடங்கள் உடனடியாகவே தமது பிழைகளைத் திருத்திக்கொள்ளும் வரை  மூடப்பட்டதுடன் இரண்டு உணவகங்கள் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன. அத்துடன் 14 கடைகளுக்கெதிராக வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டன.

மனிதப் பாவனைக்குதவாத அல்லது இரசாயனம் கலந்த 24 வாழைக்குலைகள், ஒரு தொகைப் பழங்கள், உருளைக்கிழங்கு, வெங்காயம், மா மூடைகள், தேன் என்ற பெயரில் காணப்பாட்ட சீனிப்பாணி போத்தல்கள், பெருந்தொகையான பேக்கரி உற்பத்திகள் போன்ற உணவு ப் பொருட்களும் பெருமளவான பாவனைக்குத்தகாத அலுமினியப் பாத்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டு, உடனேயே அழிக்கப்பட்டு அகற்றப்பட்டன.

இந்நிலையில் பொது மக்கள் விளிப்புடன் இருப்பது அவசியமாகும். அத்துடன் நியமங்களைக் கடந்து தவறான விதத்தில் செயற்படும் உணவகங்களை அடையாளம் காணும் போது அவற்றை பொதுச் சுகாதார அதிகாரிகளிடம் அல்லது மருத்துவ சுகாதார அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி, சமூகத்தை நோயிலிருந்து பாதுகாக்க உதவுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் குணசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.