ஜேர்மனியில் ஐரோப்பாவின் முதல் ஹைட்ரஜன் எரிவாயுக் குழாய்கள் அமைக்கும் பணி துவக்கம்


ஜேர்மனியின், ஏன் ஐரோப்பாவின் முதல் ஹைட்ரஜன் எரிவாயுக் குழாய்கள் அமைக்கும் பணி இந்த வாரம் ஜேர்மனியில் துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

900 கிலோமீற்றர் தூரத்துக்கு எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம்

ஜேர்மன் நகரமான Leipzigஐ மையமாகக் கொண்டு இயங்கும் Ontras என்ற நிறுவனம், 2030ஆம் ஆண்டு வாக்கில் 900 கிலோமீற்றர் தூரத்துக்கு எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை பெடரல் பொருளாதாரத்துறையும், அதனுடன் இணைந்து செயல்படும் Saxony மாகாண பொருளாதாரத்துறையும் வெளியிட்டுள்ளன. Leipzig நகரம் Saxony மாகாணத்தில்தான் உள்ளது.

ரஷ்யா எரிவாயு விடயத்தில் ஜேர்மனியைக் கைவிட்ட நிலையில், ஜேர்மனி எரிவாயுவுக்காக மாற்று ஏற்பாடுகளைச் செய்ய திட்டமிட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான் தண்ணீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரித்து எரிவாயுவாக பயன்படுத்தும் திட்டத்தை துவக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ஜேர்மனியில் ஐரோப்பாவின் முதல் ஹைட்ரஜன் எரிவாயுக் குழாய்கள் அமைக்கும் பணி துவக்கம் | Hydrogen Pipeline Network Begin Germany



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.