சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான அளவில் உதவுவதிலும், இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் தகவல் தொழில்நுட்பத்துறை முக்கியப் பங்காற்றுகிறது.
இதற்கான தெளிவான திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாக, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் திரு கனக ஹேரத், இலங்கை மன்றத்தில் நடைபெற்ற “லைட்டிங் டிஜிட்டல்” தேசிய மன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் டிஜிட்டல் மாற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு முக்கியமான பணி என்றும், இதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA), தொழில்நுட்ப அமைச்சின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் விரைவான மற்றும் திறமையான டிஜிட்டல் மாற்றத்தை அடைவதில் அரசாங்கம் தனது முயற்சிகளில் கவனம் செலுத்தியுள்ளது. இந்தத் திட்டம் தேசிய திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளித்து பணியாளர்களை உருவாக்குவதன் மூலம் 3.47 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது 4.37% GDP அதிகரிப்புக்கு எதிர்பார்கப்படுகிறது.
நாட்டின் பொது மற்றும் தனியார் துறைகளில் தற்போது தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நாடளாவிய ரீதியில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் பணியாளர்களை உருவாக்குவதற்காக “லைட்டிங் டிஜிட்டல்” தேசிய வெளியீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ICTA தலைமையிலான இந்த திட்டம், நாட்டில் டிஜிட்டல் மாற்றத்தை செயல்படுத்துவதையும், தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப சேவைகளின் செயல்திறன் மற்றும் வேகத்தை மேம்படுத்த பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக, அரச அதிகாரிகள், இளைஞர்கள், பெண்கள், தொழில் வல்லுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய தனி நபர்கள் சிறப்புப் பயிற்சிக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களின் ஆதரவுடன், “டிஜிட்டல் மாற்றத்தை செயல்படுத்திய ஒரு பயணம்.” என்ற ஒட்டுமொத்த செயல்படுத்தல் கருப்பொருளின் கீழ் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அரசாங்கம், கல்வி மற்றும் குடிமகன் ஆகிய மூன்று துறைகளின் பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய மூன்று நாள் பங்குதாரர் மன்றங்களின் முடிவுகள் மற்றும் அனுபவங்கள் Lightning Digital National Forum இற்கு ஒரு முன்னோடியாகப் பயன்படுத்தப்பட்டன. தேசிய தரநிலைகள், கொள்கைகள் மற்றும் சாத்தியக்கூறு கட்டமைப்பை உருவாக்குவதே இந்த தேசிய மன்றத்தின் குறிக்கோளாக இருந்தது.
லைட்டிங் டிஜிட்டல் தேசிய முயற்சியானது, 100,000 பொதுத்துறை ஊழியர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மூலம் வலுவூட்டுவதாக நம்புவதாகவும், டிஜிட்டல் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் விரைவான மாற்றத்தின் மூலம் குடிமக்களின் டிஜிட்டல் நல்வாழ்வை மேம்படுத்துவதாகவும் ICTA இன் பிரதி பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி திரு. சமீர ஜயவர்தன தெரிவித்தார். மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்தி முன்னேற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பது , மேலும் மாவட்ட அளவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான விரிவான வேலைத்திட்டம் இதற்கு சமாந்தரமாக செயற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இலங்கையர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக 2021 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய முயற்சி நாடளாவிய ரீதியில் உள்ள பெருமளவிலான மக்களுக்கு பயனளித்துள்ளது. உதாரணமாக, “NextGenGov” திறன் மேம்பாட்டுத் திட்டம், 3600 அரசாங்கப் பணியாளர்களின் தலைமை மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்த உதவியது. மேலும், இலங்கை முழுவதும் உள்ள 2000 பெண்களுக்கு “சுஹுருலியா” திட்டத்தின் ஒரு பகுதியாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றிய கோட்பாடு சார்ந்த மற்றும் நடைமுறை தொடர்பான புரிதலும் வழங்கப்பட்டது.
“Youth Bootcamps” மூலம், நாடு முழுவதும் உள்ள 13,000 இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புக் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில்முறை நிறுவனங்களில் அங்கத்துவம் பெற வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளுக்கு வழிகாட்டப்பட்டது. கல்வித் துறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க பயிற்றுவிப்பாளர்களாகப் பணியாற்றும் 700 ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளும் இவ் பூட்கேம்ப்களில் அடங்கும். இந்த தேசிய மன்றத்தைத் தொடர்ந்து, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமான எதிர்காலத்தைத் திட்டமிடும் இலங்கை சமூகத்திற்காக பெரிய அளவிலான ஆன்லைன் அமர்வுகள் மற்றும் உடல் செயல்பாடுகள் நடத்தப்படும்.
ICTA ஆனது 4 ICT தொழிற்சங்கங்கள், 15 தொழில் பங்குதாரர்கள், 10 அரசாங்க பங்காளிகள், 3 சக பங்குதாரர்கள், 3 சர்வதேச அபிவிருத்தி முகவர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிபுணர்களுடன் இணைந்து இந்த தேசிய வெளியீட்டின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், வருண ஸ்ரீ தனபால மற்றும் கே.ஜி. தர்மதிலக, CSSL தலைவர் தமித் ஹெட்டிஹேவா, SLASSCOM தலைவர் ஆஷிக் அலி, BCS இலங்கை கிளை செயலாளர் பேராசிரியர் லசித் குணவர்தன, FITIS தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் சபையின் பணிப்பாளர் என். நிர்மலன், BCS ஆசிய பிராந்திய முகாமையாளர் தீபாஷிகா குணசேகர, சமூக சேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் திருமதி. தர்ஷனி கருணாரத்ன, கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கிளையின் பணிப்பாளர் திருமதி. வாசனா எதிரிசூரிய, அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தொழில் சங்கங்கள் மற்றும் வளவாளர்கள் சர்வதேச வளர்ச்சி முகமைகள், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகமை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற சுமார் 200 நபர்கள் லைட்டிங் டிஜிட்டல் தேசிய மன்றத்தில் இணைந்தனர்.
ICTA