இந்தியா போரில் பாகிஸ்தானை வீழ்த்திய 51 ஆம் ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் வீரர்களால் நடத்தப்பட்ட சாகச நிகழ்வுகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன. இந்தியா பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டில் நடந்த போரில் இந்தியா வெற்றியை வசப்படுத்தியது.
இந்த வெற்றிக்கு பிறகே கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதி வங்கதேசம் என தனி நாடக பிரிந்தது. எனவே இந்த போரில் உயிரிழந்த வீரர்களை போற்றும் வகையில் நாடு முழுவதும் இன்று வெற்றி நாளாக அனுசரிக்கபடுகிறது. அதன்படி இந்தியா பாகிஸ்தான் போரின் 51 ஆம் ஆண்டு வெற்றித்தினமான இன்று மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற சாகச நிகழ்வுகள் பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.
பாகிஸ்தானை வென்ற தினத்தை கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்பதற்காக வங்கதேசத்திலிருந்து 65 பேர் கொண்ட குழுவினர் கொல்கத்தா வந்திருந்தனர். ராயல் கொல்கத்தா கிளப்பில் நடைபெற்ற சாகசத்தை அவர்களும் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.