பதங்கலி, மலேஷியாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 5 வயது சிறுவன் உட்பட 16 பேர் பலியாகினர்.
தெற்காசிய நாடான மலேஷியாவில், சிலாங்கூர்மாகாணத்தில் உள்ள பதங்கலி பகுதியில் சுற்றுலா தலம் உள்ளது.
இது, மலையை ஒட்டியபகுதி என்பதால், மலேஷியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் மக்கள்,இங்குள்ள கூடாரங்களில் தங்கி, இயற்கையை ரசிப்பது வழக்கம்.
இங்கு, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் சரிந்த மண், மலையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை மூடியது.
இதில் இருந்தவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர், 5 வயது சிறுவன் உட்பட 16 உடல்களை மீட்டனர்; படுகாயம் அடைந்த எட்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக 53 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 17 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement