ஹரியும் மேகனும் அவிழ்த்துவிட்டுள்ள பொய்கள்… உண்மை என்ன தெரியுமா?


பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடரில் சரமாரியாக பொய்களை அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.

ஆனால், உண்மை என்ன தெரியுமா?

நெட்ப்ளிக்ஸ் தொடரில் உண்மைக்குப் புறம்பான விடயங்கள்

ஒருபக்கம் ஹரி மேகனுடைய நெட்ப்ளிக்ஸ் தொடர் அவர்களுடைய குடும்பம் குறித்த தனிப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தியதன் மூலம் ராஜ குடும்பத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மறுபக்கமோ, அந்த தொடரில் ஹரியும் மேகனும் வெளியிட்டுள்ள பல விடயங்கள் உண்மையில்லை என ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஹரியும் மேகனும் அவிழ்த்துவிட்டுள்ள பொய்கள்... உண்மை என்ன தெரியுமா? | The Lies Harry And Meghan Have Uncovered

Credit: Netflix

திருமணம் ஆன புதிதில், சிறிய வீடு ஒன்றில் கஷ்டப்பட்டு வாழ்ந்ததாக தெரிவித்துள்ள தம்பதியர்

சமீபத்தில் ஹரி மேகன் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடரின் நான்காவது எபிசோடில், திருமணம் ஆன புதிதில் தாங்கள் கென்சிங்டன் மாளிகையில் உள்ள நாட்டிங்காம் இல்லத்தில் வாழ்ந்ததாக தெரிவித்துள்ள தம்பதியர், கென்சிங்டன் மாளிகை என்று சொல்வது, கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நாட்டிங்காம் இல்லம் மிகச் சிறியது என்று கூறியுள்ளார்கள்.

உண்மையில், நாட்டிங்காம் இல்லம், Sir Christopher Wren என்பவரால் வடிவமைக்கப்பட்ட 1,324 சதுர அடியிலமைக்கப்பட்ட இரண்டு படுக்கையறைகள் கொண்ட சொகுசு இல்லமாகும்.

ஹரியும் மேகனும் அவிழ்த்துவிட்டுள்ள பொய்கள்... உண்மை என்ன தெரியுமா? | The Lies Harry And Meghan Have Uncovered

Credit: Netflix

2018ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம்

ஹரி மேகன் தம்பதியர், 2018ஆம் ஆண்டு தாங்கள் சென்ற அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து பெருமையடித்துக்கொண்டுள்ளார்கள். தாங்கள் சூப்பர் ஸ்டார்கள் என புகழப்பட்டதாக அவர்கள் ஜம்பமடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், உண்மையில், தங்களுக்கு அவுஸ்திரேலியாவில் ஆளுநர் மாளிகை முழுவதும் கொடுக்கப்படாமல், அதன் ஒரு பகுதி மட்டுமே கொடுக்கப்பட்டதால் தம்பதியர் அப்செட் ஆகியிருந்தார்கள். அத்துடன், உதவியாளர்களுடன் மேகனுக்கு பிரச்சினை ஏற்பட, சுற்றுப்பயணம் முடிந்த அடுத்த மாதமே மேகனுடைய உதவியாளரான Melissa Toubati தனது வேலையை ராஜினாமா செய்தார்.

ஹரியும் மேகனும் அவிழ்த்துவிட்டுள்ள பொய்கள்... உண்மை என்ன தெரியுமா? | The Lies Harry And Meghan Have Uncovered

Credit: Pixel8000

மகாராணியாரையே மிஞ்சிவிட்டதாக தெரிவித்த மேகன்

2018ஆம் ஆண்டு, Festival of Remembrance என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தொடர்ந்து, மறுநாள் செய்தித்தாள்களில் தான் மகாராணியாரைவிட அதிகம் கவனம் ஈர்த்ததாக தெரியவந்ததும் ஆச்சரியத்தில் திளைத்துப்போனதாக தெரிவித்துள்ளார் மேகன்.

ஆனால், பிரித்தானிய வரலாற்றிலேயே அதிகம் மக்களால் விரும்பப்படும் நபர், உலகிலேயே அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட நபர்களில் ஒருவர் மகாராணியார் என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்.

இப்படி மேகன் பொய் மூட்டைகளாக அவிழ்த்துவிட, எத்தனை ஜென்மம் எடுத்தாலும், மேகனால் மகாராணியாரை மிஞ்ச முடியாது என கேலி செய்கின்றன பிரித்தானிய ஊடகங்கள்!
 

ஹரியும் மேகனும் அவிழ்த்துவிட்டுள்ள பொய்கள்... உண்மை என்ன தெரியுமா? | The Lies Harry And Meghan Have Uncovered

Credit: BackGrid



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.