இனி இரவு நேரங்களில் ரேஷன் கடை பொருட்களை இறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் தர மற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோல தரமற்ற பொருட்களை வழங்கும் பிரச்சனைகளை தடுக்கும் பொருட்டு ரேஷன் கடை பொருட்களை இரவு நேரங்களில் இறக்க தடை விதிக்கப்படுவதாக முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒரு சில கடைகளில் மக்களுக்கு தரமாற்ற பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தகவல் தெரிவித்தது. எனவே, இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு இனி பகல் நேரங்களில் மட்டுமே ரேஷன் பொருட்கள் இறக்கப்படும்.
பகல் நேரத்தில் இறக்கும்பொழுது பொருட்கள் தர மற்றும் இருந்தால் அதை பரிசோதித்து உடனடியாக மாற்றிக் கொள்ள முடியும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.