சாத்தான்குளம்: சாத்தான்குளம் பள்ளி முன்பு சாலையில் இருந்த பள்ளம் பேரூராட்சி மூலம் சீரமைக்கப்பட்டது. சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் செல்லும் புறவழிச்சாலையில் ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி விநாயகர் கோயில் முன்பு மேடு, பள்ளமாக காணப்பட்டது. மழை பெய்தால் இதில் தண்ணீர் தேங்கியதால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வந்தனர். இதனால் பொதுமக்கள் இதனை சீரமைக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சாத்தான்குளம் பேருராட்சி சார்பில் சிமென்ட் கலவை மூலம் மேடு பள்ளமாக இருந்த சாலை சீரமைக்கப்பட்டது. இப்பணியை பேருராட்சி செயல் அலுவலர் உஷா, முன்னாள் பேருராட்சித்தலைவர் ஜோசப் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர், முன்னாள் கவுன்சிலர் சரவணன், நகர திமுக துணை செயலாளர் மணிகண்டன் மற்றும் பேரூராட்சி பனியாளர்கள் உடன் இருந்தனர்.