தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இது, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் மேற்கு நோக்கி மெதுவாக நகரக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனால், தென் தமிழ்நாட்டில் வரும் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.