சென்னை: இந்து அறநிலையத்துறையின் சார்பில் 13 திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் குடியிருப்புகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனங்களுக்கான சாவியை ஒப்படைத்தார்.
சென்னை தலைமைசசெயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 56.18 கோடி மதிப்பீட்டில் 13 திருக்கோயில்களில் இராஜகோபுரங் கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, வணிக வளாகம், மலைப் பாதை சீரமைத்தல், மதிற்சுவர் கட்டுதல் ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்கள் கட்டுதல் போன்ற 16 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 19 புதிய வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக வாகனத்திற்கான சாவியை முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டுநரிடம் வழங்கினார்.
#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/12/hrce-sekarbabu-17-12-22-03.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/12/hrce-sekarbabu-17-12-22-04.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/12/hrce-sekarbabu-17-12-22-05.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item4 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/12/hrce-sekarbabu-17-12-22-06.jpg) 0 0 no-repeat;
}



