பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் புதிதாக கட்டப்பட்ட காவல்நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 4 போலீசார் உயிரிழந்தனர்.
பலர் படுகாயமடைந்தனர். லக்கி மார்வாட் பகுதியில் உள்ள பர்காய் காவல்நிலையத்தின் மீது, கையெறி குண்டுகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதும் தீவிரவாதிகள் தப்பியோடிய நிலையில், அப்பகுதியை சுற்றிவளைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.