வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சாட்டோகிராம்: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சாட்டோகிராமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 404, வங்கதேசம் 150 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 258/2 (‘டிக்ளேர்’) ரன் எடுத்தது. பின், 513 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 272 ரன் எடுத்து, 241 ரன் பின்தங்கி இருந்தது. சாகிப் (40), மெஹிதி ஹசன் மிராஜ் (9) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அக்சர் படேல் 3, உமேஷ், அஷ்வின், குல்தீப் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

கடைசி நாளான இன்று, மெஹிடி ஹசன் மேலும் 4 ரன்கள் எடுத்த நிலையில் 13 ரன்களுக்கு அவுட்டானார். சாகிப் 83 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப அடுத்து வந்த வீரர்களான தைஜூல் இஸ்லாம் 4, ஹூசைன் ரன் எதும் எடுக்காமல் அவுட்டாக வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 324 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் மூலம் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில், அக்சர் படேல் 4, குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை சாய்த்தனர்.

இந்த ஆண்டில், அந்நிய மண்ணில், இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். வரும் 22ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்குகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement