ரோம்: போப் பிரான்சிஸ் வயது முதிர்வு, உடல்நல குறைவினால், பதவி விலக போவதாக கடந்த ஜூலை மாதம் செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், “வாடிகன் தேவாலயத்தை நிர்வகிக்க முடியாத அளவுக்கு உடல்நிலை சரியில்லாமல், போப் பதவிக்கான கடமையை செய்ய முடியாமல் போனால் தனது பதவியை துறப்பதற்கான ராஜினாமா கடிதத்தை கடந்த 2013ம் ஆண்டிலேயே கர்தினால் பெர்டனிடம் கொடுத்து விட்ேடன் என்று தெரிவித்தார். போப் 16ம் பெனடிக்ட் என்பவரே 600 ஆண்டு கால போப் வரலாற்றில் முதல் முறையாக பதவியை ராஜினாமா செய்தவர் ஆவார்.
