அடிமேல் அடி வாங்கும் ரஷ்யா… தலைநகரில் நுழைந்த ரஷ்ய ட்ரோன்களை வேட்டையாடிய உக்ரைன் ராணுவம்


உக்ரைன் தலைநகர் கீவ்வை தாக்கிய சுமார் 20 ரஷ்ய ட்ரோன்களில் 15-ஐ உக்ரைனிய வான் பாதுகாப்பு படை அளித்துள்ளதாக அந்த நாட்டின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் கீவ்வில் தாக்குதல்

உக்ரைனிய தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது திங்கட்கிழமை ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தலைநகர் மீதான தாக்குதலில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏதும் இல்லை என்றும், சோலோமியான்ஸ்கி மற்றும் ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டங்களில் தாக்குதல் நடந்த இடங்களில் மருத்துவர்கள் பணிபுரிந்து வருவதாகவும், பூர்வாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கீவ்வின் மேயர் தெரிவித்தார்.

அடிமேல் அடி வாங்கும் ரஷ்யா… தலைநகரில் நுழைந்த ரஷ்ய ட்ரோன்களை வேட்டையாடிய உக்ரைன் ராணுவம் | Ukraine Destroys 15 Russian Drones At Kyivsky news

அத்துடன் “தலைநகரின் மீதான தாக்குதலின் விளைவாக, முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்தன” என்று விட்டலி கிளிட்ச்கோ டெலிகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்

இந்நிலையில் ரஷ்யா திங்கட்கிழமை அதிகாலை உக்ரைன் முழுவதும் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் தயாரிக்கப்பட்ட சுமார் 35 ஷாஹெட் ட்ரோன்களை பயன்படுத்தியது, அவற்றில் 30-ஐ அழித்ததாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது. 

மேலும் தலைநகர் மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 20 ரஷ்ய ட்ரோன்களில் 15-ஐ உக்ரைனிய வான் பாதுகாப்பு படை அழித்ததாகவும், அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.   

கீவ்வின் ஆளுநர் Oleksiy Kuleba வழங்கிய தகவலில், உக்ரைனிய தலைநகர் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, அதிலும் இரவு நேரங்களில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களால் உள்கட்டமைப்பு மற்றும் தனியார் வீடுகள் சேதமடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.