2022 FIFA உலக கிண்ணத்தை வென்ற ஆஜன்டினா அணிக்கு வாழ்த்து பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை , இறுதி போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் வீரர்களுக்கு பாரீசில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கட்டாரில் நேற்று (18) இரவு நடைபெற்ற உலக கிண்ண இறுதிப் போட்டியை நேரில் கண்டு ரசித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், தனது நாட்டு அணி கோல்கள் அடித்த போது உற்சாகமாக குரல் எழுப்பி அவர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.
இந்த போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரான், கிண்ணத்தை வென்ற ஆஜன்டினா அணிக்கும், அதன் வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இதேவேளை ,இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த பிரான்ஸ் வீரர்களுக்கு ‘எங்கள் அனைவரையும், நீங்கள் மிகவும் பெருமைப்படுத்தியதாகவும், அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவும்’ அவர் ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் ,இறுதி போட்டியில் தோல்வி அடைந்த பிரான்ஸ் வீரர்கள் இன்று (19) கத்தாரில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். உலக கிண்ணத்தை பெறும் வாய்ப்பை இழந்த போதிலும் பாரீசில் பிரான்ஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.