காவி உடையில் படுகவர்ச்சியான நடனம்! பிரபல நடிகை, நடிகர் மீது வழக்கு


காவி உடையில் கவர்ச்சி பாடலில் நடனம் ஆடியதாக நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

பதான் திரைப்படம்

ஷாருக்கான் – தீபிகா படுகோன் நடித்துள்ள படம் பதான் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 25ம் திகதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் காட்சி சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

அப்பாடல் காட்சியில் தீபிகா படுகோன் நீச்சலுடையில் படுகவர்ச்சியாக ஆடியிருந்தது வைரலாக பரவியது. அதோடு காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் அணிந்து தீபிகா படுகோன் நடித்திருப்பது சர்ச்சையை கிளப்பியது.

காவி உடையில் படுகவர்ச்சியான நடனம்! பிரபல நடிகை, நடிகர் மீது வழக்கு | Case Filed Against Srk Deepika Padukone

வழக்கு

இதனால் பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் பீகார் மாநிலம் முசாபூரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் சுகுமார் என்பவர் படத்தை தயாரித்த ஆதித்ய சோப்ரா, நடித்த ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த பாடலில் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், ஆபாசத்தை பரப்பியதாவும் அவர் குற்றம்சாட்டி உள்ளர். இந்த வழக்கு விசாரணைக்கு ஜனவரி 3ஆம் திகதிக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.