நாகர்கோவில் : நாகர்கோவில் கீழ ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர்கள் 5ம் வகுப்பு மாணவர்கள் ஆல்வின் ராஜ் (10), ஹெர்சோன் (10). விடுமுறை நாளான நேற்று அந்த பகுதியில் உள்ள தாமரைக்குளத்துக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இவர்களுடன், அதே பகுதியை சேர்ந்த இமானுவேலும் (11) உடன் சென்றான். மூவரும் மீன் பிடித்து விட்டு குளத்தில் குளித்துள்ளனர். அப்போது ஆல்வின்ராஜ், ஹெர்சோன் இருவரும் ஆழமான பகுதியில் மூழ்கினர். ஆல்வின் ராஜ், ஹெர்சோன் இருவரையும் இளைஞர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில், இருவரும் இறந்தது தெரிய வந்தது.