மும்பை : மஹாராஷ்டிராவில் 16 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பால்கர் கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள ஆள் அரவமற்ற கட்டடத்துக்குத் துாக்கிச் சென்ற மர்ம நபர்கள், 12 மணி நேரத்துக்கும் மேலாக பலாத்காரம் செய்ததாக, போலீசாரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தார். இதையடுத்து, தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், அதில் தொடர்புடைய எட்டு பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement