புதுடில்லி: இந்தியாவின் முதலாவது பெண் ஜனாதிபதி பிரதிபா பாட்டிலுக்கு இன்று(டிச.,19) பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் முதல் பெண் ஜனாதிபதி பிரதிபா பாட்டிலுக்கு திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதிபா தேவிசிங் பாட்டீலுக்கு பிறந்தநாம் நல்வாழ்த்துக்கள். தேசத்திற்காக, அவர் சேவை அதிகம். அவருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கடவுள் வழங்கட்டும் எனக் தெரிவித்துள்ளார்.
பிரதிபா தேவிசிங் பாட்டில்:
* இந்தியாவின் முதலாவது பெண் ஜனாதிபதி பிரதிபா தேவிசிங் பாட்டில் 1934ம் ஆண்டு மஹாராஷ்ரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் பிறந்தார்.

* இவரின் தந்தை பெயர் ஸ்ரீ நாராயண ராவ். ஜல்கானில் உள்ள எம். ஜே. கல்லூரியில் எம். ஏ. பட்டம் பெற்றார். பின்னர் அவர் மும்பையில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று வக்கீலாகவும் பயிற்சி பெற்றார்.
மஹாராஷ்டிரா சட்டசபை உறுப்பினராக 1962 முதல் 1985 வரை இருந்தவர். பின்னர் பார்லி., உறுப்பினராகவும் 1991 முதல் 1996 வரை பணியாற்றினார். இந்திய ஜனாதிபதி பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர் பிரதீபா பாட்டில்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement