வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவழித்த ஆம்ஆத்மியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார்.

டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி அரசு தனது சாதனைகளை விளக்கி விளம்பரம் செய்து வருகிறது. இதுவரை விளம்பர நிறுவனங்களுக்கு 42 கோடி ரூபாயை செலுத்திவிட்ட டில்லி அரசு, இன்னும் 55 கோடி ரூபாய் செலவு செய்ய நிதி ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் அப்போதைய டில்லி மாநில கவர்னர் அனில் பைஜால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, மக்கள் வரிப்பணத்தை ஆம்ஆத்மி அரசு தவறாக பயன்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டில்லி தலைமைச் செயலாளருக்கு துணை நிலை கவர்னர் உத்தரவிட்டார். ஆம் ஆத்மி கட்சி விளம்பரத்தை அரசின் விளம்பரம் போல் வெளியிட்டதாக டில்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement