விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்து உள்ள மீனம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்வர்பாஷா. இவர் மீனம்பூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர். திமுக பிரமுகரான இவர் ஏரியில் மண் திருட்டில் ஈடுபடுவதாக கூறி செஞ்சி பகுதி முழுவதும் ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
இது குறித்து மீனம்பூர் கிராமத்திற்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றபோது திமுக ஊராட்சி மன்ற தலைவர் முன்வர்பாஷா மற்றும் அவருடைய மகன் லியாகத் அலி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் ஏரி மண் கொள்ளை குறித்து பேட்டி கொடுக்க முன் வந்தவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
அப்போது அதனை வீடியோ பதிவு செய்ய முற்பட்ட செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து செய்தி சேகரிக்க விடாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பெறும் பரபரப்பு நிலவியது.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.