சென்னை: சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டது தமிழ்நாடு அரசு என சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கிறிஸ்துவ மதத்தின் விழாவாக இல்லாமல், அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் விழாவாக இந்த கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர் நியமன வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது; கடந்த ஆட்சியில் அந்த அரசாணையை வெளியிட்ட நான், அதை விட்டுவிடுவேனா?” அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான உதவித்தொகை விவகாரத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றாவிட்டால், தமிழ்நாடு அரசு முடிந்தளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
