
'பூத கோலா' விழாவில் அனுஷ்கா
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில், கன்னடத்தில் வெளிவந்த 'காந்தாரா' படம் சுமார் 400 கோடி வசூலித்து பெரிய சாதனையைப் படைத்தது. வட கர்நாடகாவின் மலைப் பகுதிகளில் உள்ள மக்களின் கலாச்சாராம், அவர்களது பூத கோலா விழா நிகழ்வு, கிராமியக் கடவுள் வழிபாடு ஆகியவற்றை மையமாக வைத்து வெளியான அந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பூத கோலா விழாவில் பஞ்சூர்லி நடன ஆராதனை நடைபெறுவதுதான் 'காந்தாரா' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக இடம் பெற்று ரசிகர்களைக் கவர்ந்தது. அப்படிப்பட்ட ஒரு திருவிழாவில் நடிகை அனுஷ்கா கலந்து கொண்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. வட கர்நாடகாவின் மங்களூர்ப் பகுதியைச் சேர்ந்தவர்தான் அனுஷ்கா. அவரது குடும்பத்தினருடன் அந்த திருவிழாவிற்கு அனுஷ்கா சென்றதும், பஞ்சூர்லி நடனத்தை அவர் வீடியோ எடுத்ததையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
'காந்தாரா' படத்திற்கப் பிறகு பூத கோலா, பஞ்சூர்லி உள்ளிட்ட வட கர்நாடகா பகுதி மக்களின் தெய்வ வழிபாட்டு முறை இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் பிரபலமாகி உள்ளது.