ரயில் பயணிகள் கவனத்திற்கு… கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க!

பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரும் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறையில் வெளியூர் செல்ல விரும்புபவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். இதுவரை மூன்று ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தாம்பரம் டூ சென்னை

தாம்பரம் – திருநெல்வேலி – சென்னை எழும்பூர் செல்லும் ரயில் வரும் 22ஆம் தேதி வியாழன் மற்றும் 23ஆம் தேதி வெள்ளி ஆகிய கிழமைகளில் இயக்கப்படவுள்ளது. இது 06021 மற்றும் 06022 ஆகிய எண்களில் மாற்று வழித்தடங்களில் இயக்கப்படும். தாம்பரத்தில் வியாழன் இரவு 9 மணிக்கு புறப்படுகிறது.

எந்தெந்த வழித்தடங்களில்?

இதையடுத்து செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் வெள்ளி பிற்பகல் 1 மணிக்கு திருநெல்வேலியில் புறப்படுகிறது.

எர்ணாகுளம் டூ சென்னை

இதையடுத்து கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், தாம்பரம் வழியாக சனிக்கிழமை அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது. இதையடுத்து எர்ணாகுளம் ஜங்ஷன் – டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் வரும் 22ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இரு மார்க்கத்திலும் இயக்கம்

வியாழன் அன்று இரவு 11.20 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்படும் ரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறது. மறுமார்க்கத்தில் வெள்ளி பிற்பகல் 2.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சூர் வழியாக மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு எர்ணாகுளம் வந்தடைகிறது.

தாம்பரம் டூ நாகர்கோவில்

தாம்பரம் – நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் வரும் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படுகிறது. இது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலை மறுநாள் காலை 7.10 மணிக்கு சென்றடைகிறது.

முன்பதிவு தொடங்கியது

மேற்குறிப்பிட்ட மூன்று ரயில்களுக்கான கட்டணம் என்பது வழக்கத்தை விட 1.3 மடங்கு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் விடுமுறை காலத்தை ஒட்டி ஓரிரு நாட்கள் மட்டும் சிறப்பு ரயிலாக இயக்கப்படுவதால் சற்று கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.