கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை அருகே 16 வயது சிறுமி தனது தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 6-ம் தேதியில் அவர் சோளக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது பெரியசாமி என்ற 60 வயது முதியவர் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இதை கண்ட சிறுமியின் சித்தப்பாவான 31 வயதான இடும்பன் என்பவர் அந்த முதியவரை விரட்டி விட்டு பின் சிறுமியை காப்பாற்றுவது போல் நடித்து அவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு இருக்கின்றார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் என்ற நபருக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட அவரும் சிறுமியிடம் பாலியல் ரீதியாக உறவு வைத்துள்ளார்.
ஆறு மாதங்களாக இவர்கள் 3 பேரும் சிறுமையுடன் மாறி மாறி பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டு இருக்கின்றனர். இது பற்றி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் சம்பவம் நடந்தது உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து இருக்கின்றனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.