அந்த 5 முடிவுகள்… பாயிண்டை பிடிச்ச ஓபிஎஸ்… அதிமுகவில் இனி மாறப் போகும் அரசியல்!

அதிமுகவில் அதிகாரத்தை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம்,

ஆகியோர் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். கட்சி தலைமைக்கான முக்கிய பதவிகள் அனைத்தும் காலாவதியாகி விட்டன. இருப்பினும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று அவரது ஆதரவாளர்களும், ஒருங்கிணைப்பாளர்

என்று இவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இரண்டு அணிகளாக மோதல்

இந்நிலையில் ஆதரவு நிலைப்பாட்டில் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டது. இதைக் கண்டு ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். பதிலுக்கு எடப்பாடி ஆதரவாளர்களை நீக்கி ஓ.பன்னீர்செல்வம் அதிரடி காட்டினார். பின்னர் தலைமை கழக நிர்வாகிகள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை தங்கள் ஆதரவாளர்களை தனித்தனியே நியமனம் செய்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கிடுச்சு

இந்த சூழலில் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார். இன்று (டிசம்பர் 21) காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை கழக நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இரு அணிகளும் பிரிந்த பின்னர் மாநில அளவில் ஓபிஎஸ் தரப்பு நடத்தும் முதல் கூட்டம் இதுவாகும்.

என்னென்ன முடிவுகள்

இதனால் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி தரப்பிற்கு தங்களின் பலத்தை காட்டவே இப்படியொரு கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரிகிறது. இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். சில முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சிலவற்றை இங்கே காணலாம்.

அதிமுகவை ஒருங்கிணைத்து ஒற்றுமையாக கொண்டு செல்வது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிற்கும் நிர்வாகிகளை தங்கள் அணியில் சேர்த்து கட்சியை பலப்படுத்துவதுபுதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக சிறப்பான வெற்றியை பெறும் வகையில் செயல்பட வேண்டும்அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதாவே தொடர்ந்து நீடிப்பார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி தொடரும். அதில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து நீடிப்பார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும்.அதிமுகவில் நீடிக்கும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண்பது, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு கட்சியை கைப்பற்றுவது

போட்டி பொதுக்குழு

இந்த ஐந்து விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர போட்டி பொதுக்குழு நடத்துவது பற்றியும், அதை எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் எப்படி கொண்டு செல்வது என்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இன்னும் சில நிமிடங்களில் ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.