திடீரென பேச்சு வரலை.. பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி..!

பிரபல நடிகையும், மாடல் அழகியுமான உர்ஃபி ஜாவத் உடல்நலக் குறைவு காரணமாக, துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஹிந்தி தொலைக்காட்சி நடிகையான உர்ஃபி ஜாவத்(25), இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆட்டிவாக இருப்பவர். சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்க்க அறைகுறையாக ஆடைகளை அணிந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவது வழக்கம்.

அதேசமயம், தன்னுடைய அதிரடிகளால் பலரின் மனதையும் சில சமயம் காயப்படுத்தியும் இருக்கிறார். அடிக்கடி ஆபாச மற்றும் வித்தியாசமான அரைகுறை ஆடைகளை அணிந்து பொதுவெளியில் போஸ் கொடுத்து வந்ததால், எந்நேரமும் இவர் லைம்லைட்டிலேயே இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது துபாயில் இருக்கும் உர்ஃபி ஜாவத்துக்கு திடீரென பேச்சு வரவில்லை. இதையடுத்து அவர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு, குரல்வளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அந்த வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட அவரது போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் உர்ஃபி ஜாவத் பேசும்போது, அவருடைய குரல் பாதிக்கப்பட்டிருப்பதும், அவருக்கு குரல்வளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவருகிறது.

அவருக்கு பின்னால் டாக்டர் நிற்கிறார். அவருடன் உர்ஃபி பேச முயல்கிறார். ஆனால் அவரால் பேசமுடியவில்லை. உர்ஃபியின் மருத்துவமனை போட்டோக்களை பார்த்து அவரது ரசிகர்கள், ‘அவர் விரைவில் குணமடைய வேண்டும்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.