புதுடெல்லி: வெளிநாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா சோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா புதிய மாறுபாடுகளை சரியான நேரத்தில் கண்டறிந்து, தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனா சோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் சுமார் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே முன்கூட்டியே தொற்றை கண்டுபிடித்து தனிமைப்படுத்துவது மிகவும் முக்கியம் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். சந்தேகப்படும்படியான மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பி சோதிக்கும்படி அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.