Samantha: சமந்தா எடுத்த அதிரடி முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

டாப் நாயகிதமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் சமந்தா. அதைத்தொடந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு விஜய்யின் கத்தி திரைப்படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதையடுத்து தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்த சமந்தா முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் சமந்தா
பிரிவுசமந்தா தான் காதலித்த நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த பின்னரும் நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தார் சமந்தா. இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்தாண்டு விவாகரத்து பெற்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் சமந்தா. இருப்பினும் மெல்ல மெல்ல தன் கவனத்தை படங்களின் மீது திருப்பினார். என்னதான் சொந்த வாழ்க்கையில் சமந்தா பின்னடைவை சந்தித்தாலும் சினிமா வாழ்க்கையில் முன்னேற்றத்தை கண்டார்.
அதிரடிசமந்தா விவாகரத்து ஆன பின்பும் தொடர்ந்து திரைத்துறையில் கவனம் செலுத்த துவங்கினார். மேலும் கவர்ச்சியான காதாபாத்திரங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டினார் சமந்தா. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய கவர்ச்சி பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இதையடுத்து அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தன. மேலும் முதன்மை நாயகியாகவும் சமந்தா தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்தார்.
இடைவேளைஇந்நிலையில் சமந்தா திரைத்துறையில் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்க அவருக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திருப்பினார். அந்த நோய்யுடனே தான் நடித்த யசோதா படத்திற்கு ப்ரோமோஷன் செய்தார் சமந்தா. இந்நிலையில் தற்போது சமந்தாவிற்கு நோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. எனவே தான் தற்போது நடித்து கொண்டிருக்கும் குஷி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சில காலம் நடிப்பில் இருந்து விலகி இருக்க சமந்தா முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது. தற்போது இந்த செய்தியினால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.